சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவருக்கு 20 ஆண்டு சிறை

இலுப்பூர் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Update: 2024-04-02 06:16 GMT

 இலுப்பூர் அருகே போலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சோலையப்பன் (53). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 21.08.2022 அன்று அதே பகுதியை சேர்ந்த 2ம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தார். இதுபற்றி சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் இலுப்பூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் சோலையப்பனை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ஜெயந்தி விசாரித்து குற்றம்சாட்டப்பட்ட சோலையப்பனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராத மும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், வன்கொடுமை தடுப்பு பிரிவின்கீழ் 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்ட னையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 2 மாதம் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

தண்டனையை ஏக காலத் தில் அனுபவிக்கவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.4 லட்சத்துடன், குற்றவாளிக்கு அபராதமாக விதிக்கப்பட்ட ரூ.30 ஆயிரம் சேர்த்து ரூ.4 லட்சத்து 30 ஆயிரத்தை தமிழக அரசு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News