சிறுமிக்கு பாலியல் தொல்லை: டெய்லருக்கு 7 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லருக்கு 7 ஆண்டு சிறை வழங்கி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2023-12-28 16:35 GMT

குற்றவாளியான டெய்லர்

சிவகங்கை மாவட்டம், கல்லல் பகுதியை சேர்ந்தவர் பாக்கியநாதன். வயது 59. இவர் கல்லல் பேருந்து நிலையத்தில் டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2019 செப்.23 தேதி அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல்ல் செய்துள்ளார்.

சிறுமியின் பெற்றோர் கல்லல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் பாக்கியநாதனை கைது செய்தனர். இந்த வழக்கு இன்று சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றதுது. வழக்கை விசாரித்த நீதிபதி சரத்ராஜ், பாக்கியநாதன் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக ஐந்தாண்டு சிறை தண்டனையும் 30 ஆயிரம் ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் ஆறு மாத சிறை தண்டனையும்,

சிறுமியை மிரட்டிய குற்றத்திற்காக இரண்டு ஆண்டு சிறதண்டனையும் 10 பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும், மேலும் தமிழக அரசு சிறுமிக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க கோரியும் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News