சிறுமியிடம் அத்துமீறல் - பள்ளி ஊழியருக்கு 5 ஆண்டு சிறை

விருகம்பாக்கத்தில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பள்ளி ஊழியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Update: 2024-03-07 02:53 GMT

சிறை தண்டனை 

விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில், அப்பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி 1ம் வகுப்பு படித்துள்ளார். அந்த பள்ளியில், கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 54 வயதான நபர், அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த 2013 மார்ச் 28ல், பள்ளி நேரத்தில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் அளித்த புகாரின்படி, விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அலுவலக உதவியாளரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வழக்கை நீதிபதி எம்.ராஜலட்சுமி விசாரித்தார். போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, 'குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், அலுவலக உதவியாளருக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, தீர்ப்பளித்தார்.

Tags:    

Similar News