தைப்பூசத்தை முன்னிட்டு, ஓம் சக்தி மன்றத்தில் சக்தி மாலை அணியும் விழா

கோயம்பள்ளியில்,தைப்பூசத்தை முன்னிட்டு ஓம் சக்தி மன்றத்தில் சக்தி மாலை அணியும் விழா நடைபெற்றது.

Update: 2024-01-19 10:04 GMT

கோயம்பள்ளியில் தைப்பூசத்தை முன்னிட்டு, ஓம் சக்தி மன்றத்தில் சக்தி மாலை அணியும் விழா நடைபெற்றது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, தாந்தோணி மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, கோயம்பள்ளி கடை வீதியில் செயல்படும் ஓம் சக்தி வழிபாட்டு மன்றத்தில், கடந்த 40 வருடங்களாக சக்தி மாலை அணிந்து மேல்மருவத்தூர் சன்னதிக்கு செல்லும் விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வரும் தைப்பூச திருநாளை முன்னிட்டு, இன்று சக்தி மாலை மற்றும் இருமுடி அணியும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் குரு சாமியிடம் பயபக்தியோடு மாலை அணிந்து, இரு முடியை பெற்றனர்.

இன்றிலிருந்து ஐந்து நாட்கள் விரதம் இருந்து வரும் ஜனவரி 23ஆம் தேதி அன்று மேல்மருவத்தூர் செல்ல உள்ளனர். ஒவ்வொரு வருடமும் இந்த வழிபாட்டு மன்றத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் செல்வது வழக்கம். இன்று நடைபெற்ற சக்தி மாலை அணியும் விழாவில் 125க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, சக்தி மாலை அணிந்து இருமுடியை தாங்கி சென்றனர். இதற்கான ஏற்பாட்டினை மேல்மருவத்தூர் ஆதிபரா சக்தி கோயம்பள்ளி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் பொருளாளர் கோபால், நிர்வாகிகள் சீரங்கன், லோகாம்பாள், முருகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, சக்தி மாலை மற்றும் இருமுடி தாங்கும் விழாவை சிறப்பித்தனர்.

Tags:    

Similar News