ராசிபுரத்தில் சக்தி கேந்திரா ஆலோசனை கூட்டம்

ராசிபுரத்தில் சக்தி கேந்திரா கிளை ஆலோசனை கூட்டம் நடந்தது.;

Update: 2024-01-02 04:02 GMT

ஆலோசனை கூட்டம் 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சக்தி கேந்திரா 120 ஆவது கிளை தலைவர் ஜீவானந்தம் வீட்டில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பிஜேபி துணைத் தலைவர் வழக்கறிஞர் ஆர்டி. இளங்கோ, தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கிளைத்தலைவர்கள் பத்மநாபன், முருகேசன், மற்றும் கிளை துணைத் தலைவர் ராஜகோபால், தமிழ்ச்செல்வன், செல்வம், ஆனந்தன், ஆகியோரும் கலந்து கொண்டனர். இதில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாகவும், ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை சிறப்பிப்பது குறித்தும், பொங்கல் விழா நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
Tags:    

Similar News