சங்கரலிங்க சுவாமி ,கோமதி அம்மன் திருவீதியுலா

சங்கரன்கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி சங்கரலிங்க சுவாமி, கோமதி அம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

Update: 2024-04-16 08:28 GMT

 திருவீதியுலா

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்ச்சையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் 3ம் நாளான இன்று ஸ்ரீ கோமதி அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்திலும் சங்கரலிங்க பெருமான் வெள்ளி பூத கன வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
Tags:    

Similar News