முத்தாலங்குறிச்சி பழமையான சிவன் கோவிலில் சிவராத்திரி விழா
முத்தாலங்குறிச்சியில் உள்ள பழமையான சிவன் கோவிலில் 24 வருடங்கள் கழித்து சிவராத்திரி விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் முத்தாலங்குறிச்சியில் மிகவும் பழமையான இராமவிநாயகர், வீரபாண்டீஸ்வரர், லெட்சுமி நரசிம்மர் கோயில் ஒரே வளாகத்தில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 2000 ம் வருடத்தில் சிவராத்திரி விழா நடந்துள்ளது. அதன் பிறகு நடைபெறவில்லை. தற்போது அறநிலையத்துறை சார்பில் ஒரு கால பூஜையில் மூன்று கோயில்களும் சேர்க்கப்பட்டது. அதன் பின் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
தற்போது கோயில் திருப்பணி வேலை நடைபெற ஆயத்த வேலைகள் நடந்து வருகிறது. மாவட்ட கமிட்டி அனுமதி பெற்று சென்னையில் மாநில கமிட்டிஅனுமதி பெற்று அரசு நிதிக்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களிடம் பரிந்துரை கடிதம் கொடுத்து, தற்போது பணம் ஒதுக்கீடு செய்ய பக்தர்கள் காத்திருகிறார்கள். கிராம கோயில் முன்னேற்ற திட்டம் மூலமாகவும் இந்த கோயிலில பணிகள் துவங்க உள்ளது. இதற்கிடையில் 24 வருடங்கள் கழித்த சிவராத்திரி திருவிழா இந்த கோயிலிடில் நடந்தது.
இதற்காக அதிகாலை நடை திறக்கப்பட்டது. ராமவிநாயகர், லெட்சுமி நரசிம்மர், வீரபாண்டீஸ்வரர், சிவகாமி, பைரவர் உள்பட தெய்வங்களுக்கு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. மேலும் கும்ப பூஜையும் நடந்தது. இந்த பூஜையில் பூஜை கட்டளைதாரர் மாசனம், லெட்சமி நரசிம்மர் கைங்கர்ய சபை தலைவர் சோமசுந்தரம், அறங்காவலர் காமராசு உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை லெட்சுமி நரசிம்மர் கைங்கர்ய சபா செய்திருந்தது.