நடைபாதை ஆக்கிரமித்து கடைகள்: பிளாஸ்டிக் பைகளும் தாராளம்

நடைபாதை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டதும் அல்லாமல் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடும் தாராளமாக உள்ளது.

Update: 2024-06-08 04:24 GMT

நடைபாதை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டதும் அல்லாமல் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடும் தாராளமாக உள்ளது.


பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார், ரயில் நிலையம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும், திருவள்ளூர் ஜே.என்.சாலையை பயன்படுத்தி வருகின்றன. பேருந்து நிலையம், செங்குன்றம், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களும் அதிகளவில் இச்சாலையில் பயணிக்கின்றன. இந்த நிலையில், பேருந்து நிலையம் திரும்பும் இடத்தில், உழவர் சந்தை அருகில், நடைபாதையை ஆக்கிரமித்து, 10க்கும் மேற்பட்ட பூக்கடைகள் வைக்கப்பட்டுள்ளன. பூ வாங்க வருவோர் தங்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்திச் செல்வதால், இந்த இடத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும், ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளும் தாராளமாக பயன்படுத்தப்படுகின்றன. நடைபாதையை ஆக்கிரமித்துள்ளதால், பொதுமக்கள் சாலையில் நடந்து செல்கின்றனர். இதனால், அடிக்கடி விபத்துகளும் நடைபெறுகின்றன. எனவே, நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் நடைபாதை மற்றும் சாலையோரம் ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News