முதல்வர் ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்-பி.ஆர்‌.நடராஜன்

அனைவருக்கும் உணவு, கல்வி அவசியம் என சொல்லும் அரசு தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருவதால், திமுக அரசை பாதுகாப்பதும், முதல்வர் ஸ்டாலின் கரத்தை பலப்படுத்துவதும் நமது பணியாக இருக்க வேண்டும் என எம்.பி, பி.ஆர் நடராஜன் தெரிவித்தார்.

Update: 2024-01-04 04:32 GMT

கோவை சங்கனூர் பகுதியில் ஆரம்பப்பள்ளியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுற்று சுவர்,இச்சிப்பட்டி காலனியில் 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம்,ரங்கநாதபுரம் ஆரம்ப பள்ளியில் 2.30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நீளம் தாண்டுதல் தளம், வீரகேரளம் ஆனந்தா நகர் பகுதியில் 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரேசன் கடை கட்டிடம்,வடவள்ளி மகாராணி அவன்யூ பகுதியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் அகிய திட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த பணிகள் அண்மையில் நிறைவடைந்த நிலையில் திட்ட பணிகளை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டு அர்ப்பணித்த நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் விழாவில் பேசுகையில் பொது விநியோக திட்டம் ஏழை எளிய மக்களுக்கானது மட்டும் அல்ல எனவும் இந்த தேசத்தின் அனைத்து பகுதி மக்களின் தேவை என்பதை கவனத்தில் கொண்டு பொது விநியோகத் திட்டம் பாதுக்காக்கபட வேண்டும் என்றார்.தான் லேபர் கமிட்டி உறுப்பினராக இருந்தபோது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ஆந்திர மாநிலத்திற்கு சென்றிருந்தேன்.

அங்கு குடிசைத் தொழிலாக வளையல் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடம் பேசியபோது குடும்பத்தில் உள்ள அனைவரும் உழைத்தால் தான் 120 ரூபாய் சம்பளம் கிடைக்கும் என தெரிவித்தனர். ஆந்திராவில் எளிய மக்களின் நிலை இப்படி இருக்க அங்குள்ள ரேஷன் கடைகளில் அரிசி ஒரு கிலோ 9 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.ஆனால் திராவிட கட்சிகள் ஆளும் தமிழ்நாட்டில் 20 கிலோ அரிசி விலையில்லாமல் வழங்கப்பட்டு வருவதாகவும் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் அரிசி விலை இல்லாமல் வழங்கபடுவதில்லை எனவும் கொரோனா காலத்தில் இலவச அரிசி வழங்கபடாமல் இருந்தால் ஏழை எளிய மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி இருப்பார்கள் எனவே பொது விநியோக திட்டத்தை காப்பது மிகவும் அவசியமாகும் என்றார்.

உணவு அனைவருக்கும் கட்டாயம் தேவை அதே போல் கல்வியும் அவசியம் என சொல்லும் அரசு தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருவதாகவும் திமுக அரசையும் பாதுகாப்பதும் முதல்வர் ஸ்டாலின் கரத்தை பலப்படுத்துவதும் நமது பணியாக இருக்க வேண்டும் என பேசினார். இந்த நிகழ்வுகளில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் உட்பட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News