சித்தர்காடு கோவில் கும்பாபிஷேகம் - டாஸ்மாக் கடைக்கு விடுமுறை விட கோரிக்கை

ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையடுத்து டாஸ்மாக் மதுபான கடையை இரண்டு நாட்களுக்கு மூடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Update: 2024-02-12 10:46 GMT

சித்தர்காடு கோவில் கும்பாபிஷேகம் - டாஸ்மாக் கடைக்கு விடுமுறை விட கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தர்காடு காவிரிகரை பகுதியில் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உள்ளது. பழமையான இக்கோவில் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடந்தது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து கோவிலில் திருப்பணி வேலைகள் செய்து முடிக்கப்பட்டு, வருகின்ற 15 ஆம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கோவில் கும்பாபிஷேகத்திற்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் குழந்தைகள் பெண்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்திற்கு வந்த சித்தர்காடு மற்றும் மாப்படுகை கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயி ராமலிங்கம் உட்பட முக்கிய பிரமுகர்கள் மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் கும்பாபிஷேகத்திற்கு வருகை தரும்படி பத்திரிகை அளித்து வரவேற்றனர். மேலும் அவர்கள் அளித்த மனுவில்,‌ சித்தர்காடு பகுதி காவிரி ஆற்றங்கரை ஓரம் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடையை ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வருகின்ற 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்களுக்கு மட்டும் மூட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என கூறினார்.
Tags:    

Similar News