சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கொண்டாட்டம்

தர்மபுரி குப்பா கவுண்டர் தெருவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ மாரியம்மன் மகா கும்பாபிஷேகம் விழா பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Update: 2024-06-13 16:55 GMT

கும்பாபிஷேகம் 

தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட குப்பா கவுண்டர் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் அருள்மிகு மாரியம்மன் அருள்மிகு ஸ்ரீ பூவாடை காவேரி அம்மாள் மற்றும் அருள்மிகு ஸ்ரீ முனியப்பன் சாமி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 8 தேதி கணபதி ஹோமம், ஸ்ரீ மகாலட்சுமி ஹாமம், ஸ்ரீ நவகிரக ஓமம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாக குழுவின் சார்பில் கொடியேற்றம் கங்காணம் கொட்டுதல் நடைபெற்றது அதைத்தொடர்ந்து மாரியம்மன்க்கு கண் திறந்து சிறப்பு பூஜைகள் மாரியம்மன் வாகனத்தில் அலங்கரித்து குப்பா கவுண்டர் தெரு கோவிலிலிருந்து புறப்பட்டு ஆத்து மேடு வழியாகச் சென்று தர்மபுரி கடைவீதி பெரியார் சிலை அவ்வையார் அரசு மேல்நிலைப்பள்ளி வழியாக வாதிமேளம்,கரகாட்டம் பம்பை ஆட்டம் கலந்து கொண்டு ஊர்வலத்தில் நடைபெற்றது .

குப்பா கவுண்டர் தெரு, விநாயகர் கோயிலில் இருந்து 108 மூலிகை உடன் வாதி மேலத்துடன் உருவமாக மாரியம்மன் கோவிலில் யாகசாலையில் வைத்து முதலாக சாலை பூஜை நடைபெற்றது.

முக்கிய நாளான இன்று காலை இரண்டாம் கால பூஜை மூன்றாம் கால பூஜை நடைபெற்ற யாகசாலையில் இருந்து கலச புறப்பாடு வாதி மேலத்துடன் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் அருள்மிகு மாரியம்மன் அருள்மிகு ஸ்ரீ பூவாடை காவேரி அம்மாள் மற்றும் அருள்மிகு ஸ்ரீ முனியப்பன் சாமி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை எப்படி சிறப்பாக நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் பெற்றனர்.

கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது விழாக்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News