சைடு லாக் உடைப்பு - எஸ்.ஐ மீது காவல் ஆணையரிடம் புகார்
பாலக்கரை காவல் நிலையம் எதிரே நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞரின் ஸ்கூட்டரின் சைடு லாக்கை உடைத்த சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
திருச்சி பாலக்கரை ஆட்டுக்காரத் தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரி வையாபுரி. வக்கீல் ஆன இவர் பாலக்கரை காவல் நிலையம் எதிரே அலுவலகம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 21ஆம் தேதி பாலக்கரை காவல் நிலையத்தை ஒட்டி உள்ள சுவரின் அருகே தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு சென்றார். மீண்டும் 23ஆம் தேதி அங்கு சென்று பார்த்த போது ஸ்கூட்டர் மாயமாகி இருந்தது அக்கம் பக்கத்தில் இடம் விசாரித்த போது ஸ்கூட்டரை பாலக்கரை போலீசார் காவல் நிலையத்திற்குள் கொண்டு சென்றதாக தெரிவித்துள்ளனர்.
உடனே அவர் காவல் நிலையம் சென்று போலீசாரிடம் வாகனத்தின் ஆர்சி புத்தகத்தை காண்பித்து கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு ஸ்கூட்டரை எடுத்து வர முயன்றார் . ஆனால் ஸ்கூட்டரை சிறிது கூட நகர்த்த முடியவில்லை அதனால் சந்தேகம் அடைந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவை பார்த்தார். அதில் சம்பவத்தன்று வக்கீல் மகேஷ் வையாபுரி யின் கூட்டரை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சைட் லாக்கை உடைத்து காவல் நிலையத்திற்குள் கொண்டு சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் தனது வாகனத்தை உடைத்து சேதப்படுத்திய சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது