ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் 

அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில், அரசுக் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கையெழுத்திட்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

Update: 2024-01-11 10:34 GMT
கையெழுத்து இயக்கம்
 தமிழகத்தில் 170 அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டு, ஓர் ஆண்டுக்கு மேல் ஆன நிலையில், இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பணி நியமன அறிவிப்பு வெளியிடப்படவில்லை.  எனவே, உடனடியாக பணி நியமன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர், உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், சென்னை கல்லூரி கல்வி இயக்குனர் ஆகியோரை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் கையெழுத்து இயக்கம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.  இதன் ஒருபகுதியாக, பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.
Tags:    

Similar News