100% வாக்களிப்பை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்
நாகப்பட்டினம் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்களிப்பை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் துவக்கம்.
நாகப்பட்டினம் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்களிப்பை வலியுறுத்தி மாற்றுத்திறனாளி நலத்துறை மற்றும் மகளிர் குழுக்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ்,துவக்கி வைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவை எட்டுவதற்காக நாள்தோறும் வாக்காளர்களை கவரும் வகையில் ஒவ்வொரு அரசுத்துறை மூலமாக பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்றையதினம் நாகப்பட்டினம் மாவட்ட புதிய பேருந்து நிலையத்தில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் குழுக்கள் மூலம் விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து, 'என் ஒட்டு என் உரிமை" வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களுக்கும், பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் வழங்கி வாக்குப்பதிவின் அவசியத்தை விளக்கினார்.
இப்பேரணி புதிய பேருந்து நிலையத்தில் துவங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையில் நிறைவுபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ஹர்ஷ் சிங். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி ரா.பேபி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/வருவாய் கோட்டாட்சியர் கோ.அரங்கநாதன், திட்ட இயக்குநர்(மகளிர் திட்டம்) முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.