சிறு விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அடையாள வேலை நிறுத்தம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டார சிறு விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அடையாள வேலை நிறுத்தம்.;

Update: 2024-02-28 10:31 GMT
சிறு குறு தொழில் நிறுவனங்கள் வணிக கடன்களை விரைவாக வசூலிக்க கொண்டுவரப்பட்டுள்ள வருமான வரி சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டார சிறு விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் எம் எஸ் எம் மீ 43 எச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் அல்லது திருத்தம் செய்து தர வேண்டும் எனமத்திய அரசை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம். சிறு குறு நிறுவனங்கள் நடுத்தர நிறுவனங்கள் வணிக கடன்களை 45 நாட்களுக்கு மேல் நிலுவையில் செலுத்தாமல் வைத்திருந்தால் அத்தொகையை வருமானமாக கருதி வருமானவரி செலுத்த வேண்டும் என வருமான வரி மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் வரும் மார்ச் 31ம் தேதி அமுல் ஆகிறது இதனால் ஜவுளி சார்ந்த தொழில்கள் மிகுந்த பாதிப்படையும் என்பதால் இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், அல்லது ஓராண்டு கால அவகாசம் கொடுத்து 45 நாள் என்பதை 90 நாட்களாக மாற்றித் தர வேண்டும் என வலியுறுத்திதிருச்செங்கோடு வட்டார விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு லட்சம் தறிகள்ஓடாமல் ஒரு ஷிப்ட் அடையாள வேலை நிறுத்தம்முன்னாடி பெற்றது. தறிகள் ஓடாததால் 30 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி பாதிக்கப்படும், சுமார் 7 கோடி கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி உற்பத்தி பாதிப்பு பாதிப்படையும், மத்திய அரசின் இந்த சட்டத்தால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை விற்க முடியாமல் தவிப்பதாகவும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் முடியாத பட்சத்தில் ஒரு வருட காலம் இந்த சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் மேலும் சட்டத்தைதிருத்தம் செய்து 45 நாட்கள் என விதிக்கப்பட்டுள்ள நிபந்தனையை 90 நாட்கள் என மாற்றம் செய்து தர வேண்டும்.ஜவுளி தொழிலை நம்பி நேரடியாக மறைமுகமாக 2 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் இந்த சட்டத்தை திருத்தம் செய்து தர வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்வதாக சங்க நிர்வாகி முருகானந்தம் தெரிவித்தார்.
Tags:    

Similar News