சிலம்பம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பழைய காட்பாடி பகுதியில் சிலம்பம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பழைய காட்பாடி பகுதியில் கழுகுமனையார் சோழா மார்ஷியல் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல், சிங்கத்தமிழன் சிலம்பம் அகாடமியின் 8 ஆம் ஆண்டு ஆயுதபூஜை மற்றும் ஆண்டு விழாவை முன்னிட்டு சிலம்பம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்,பளு தூக்கும் வீரர் காமன்வெல்த் போட்டியில் இரண்டு முறை தங்கம் வென்று அர்ஜுனா விருது பெற்ற சதீஷ் சிவலிங்கம் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், 6வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.ஜி.சீனிவாசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு, சிலம்பாட்டதில் சிறப்பாக தங்கள் திறமைகளை வெளிக்காட்டிய 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசளித்து மாணவர்களை ஊக்குவித்தனர் .
முன்னதாக நிகழ்ச்சியில் காமன் வெல்த் வீரர் சதீஷ் சிவலிங்கம் கூறுகையில் அழிந்து வரும் கலையான சிலம்பம் கலையை தற்பொழுது தமிழகத்தில் ஊக்குவித்து வருவது பெருமையாக உள்ளது மேலும் கிராமப்புற பகுதிகளில் இந்த கலை இன்னும் தற்பொழுது மென்மேலும் வளர்ந்துள்ளது கடுமையாக முயற்சி செய்தால் கண்டிப்பாக அனைவரும் தங்கப்பதக்கம் வெல்லலாம்.
இதனால் தமிழகத்திற்கும் நாட்டிற்கும் பெருமையாக இருக்கும் விளையாட்டுப் போட்டிகளில் போட்டியிருக்கலாமே தவிர பொறாமை இருக்கக் கூடாது நீங்கள் சேர்ந்தும் ஒவ்வொரு வியர்வையும் நாளை வெற்றிப் படிக்கட்டாக மாறும் என பேசினார்.