நாட்டரசன் கோட்டையில் வெள்ளி ரத ஊர்வலம்
நாட்டரசன் கோட்டையில் வெள்ளி ரத ஊர்வலம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
Update: 2024-05-23 06:19 GMT
சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை அருள்மிகு கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வெள்ளி ரத ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது. இந்த கோயிலில் வைகாசி பெருந்திருவிழா மே 14 -ஆம் தேதி தொடங்கி 24 -ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் அம்மன் எழுந்தருளி நாட்டரசன் கோட்டை முக்கிய வீதிகளின் வழியாக அம்மன் உலா வந்தார். இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்