சேலம் : வெள்ளி வியாபாரி கொலை வழக்கு

சேலத்தில் வெள்ளி வியாபாரி கொலை வழக்கில் போலீஸ்காரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-03-07 13:34 GMT

வெள்ளி வியாபாரி கொலை வழக்கு

சேலம், செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). வெள்ளி வியாபாரி. இவர் கடந்த மாதம் (பிப்ரவரி) 2-ந்தேதி கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக செவ்வாய்பேட்டை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவின் பேரில், துணை கமிஷனர் மதிவாணன் தலைமையில் 3 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டனர்.

கொலையாளிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் சங்கர் கொலை வழக்கில் அவருடைய மைத்துனர் சுபாஷ்பாபு, பிரபல ரவுடி கோழி பாஸ்கர் மற்றும் வேலாயுதம் உள்பட 8 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். பின்னர் ரவுடி கோழி பாஸ்கரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Advertisement

அதில் வெள்ளி வியாபாரி கொலையில் சேலம் மாநகர ஆயுதப்படை போலீஸ்காரர் உதயகுமார் (32), சேலம் கிச்சிப்பாைளையத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஆரிப் (39) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் 2 பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது இருவருக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆயதப்படை போலீஸ்காரர் உதயகுமார் மற்றும் ஆரிப் ஆகிய 2 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். அதன்படி வெள்ளி வியாபாரி சங்கர் கொலை வழக்கில் இதுவரை மொத்தம் 10 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

Tags:    

Similar News