ஜெனரேட்டரை துவங்கி வைத்த சார் ஆட்சியர் அர்விட் ஜெயின்
சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு இலந்தைகுளம் சேஷசாயி பேப்பர் நிறுவனத்தினர் வழங்கிய 62 kv ஜெனரேட்டர் திறப்பு விழா நடைபெற்றது.
By : King 24x7 Angel
Update: 2024-02-14 07:09 GMT
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு இலந்தைகுளம் சேஷசாயி பேப்பர் நிறுவனத்தினர் அன்பளிப்பாக வழங்கிய 62 kv ஜெனரேட்டர் திறப்பு விழா இன்று 14/02/24 காலை நடைபெற்றது. இதில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்விட் ஜெயின் கலந்துகொண்டு ஜெனரேட்டரை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சேரன்மாகாதேவி தலைமை மருத்துவ அலுவலர் சாந்தி மற்றும் சேஷ சாயி பேப்பர் மில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.