சீர்காழி : காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

சீர்காழி அருகே குடிநீர் வராததை கண்டித்து காலி குடத்துடன் கிராம மக்கள் சீர்காழி - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் ஒரு மணி நேரமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

Update: 2024-06-28 08:46 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு ஊராட்சிக்கு உட்பட்ட தேத்தாகுடி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்,இந்த கிராமத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்குவதாக அறிவித்தும் நான்கு ஆண்டுகள் முடிந்தும் இதுவரையில் குடிதண்ணீர் வழங்காத அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டித்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடத்துடன் சீர்காழி - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஒரு மணி நேரமாக ஈடுபட்டுள்ளனர்

குடிதண்ணீர் தேடி கிராம மக்கள் பக்கத்து கிராமங்களை தேடி தினந்தோறும் குடங்களை வண்டிகளில் கட்டிக்கொண்டு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் அன்றாட வேலைக்கு செல்பவர்கள் குடிதண்ணீர் பிடிப்பதிலேயே காலம் செல்வதால் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருவதால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் மேலும் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்தால் மட்டுமே மறியலில் இருந்து கலைந்து செல்வதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் சீர்காழி, சிதம்பரம், சென்னை,பாண்டி செல்லக்கூடிய பேருந்துகளும் அதேபோல நாகப்பட்டினம் வேளாங்கண்ணி செல்லக்கூடிய பேருந்துகளும் கனரக வாகனங்கள் கார்கள் என அனைத்தும் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளது இதுகுறித்து பாகசாலை போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News