சீர்மிகு நகரத் திட்டம்: மக்களை அப்புறப்படுத்த எதிர்ப்பு
சீர்மிகு நகரத் திட்டம் என்ற பெயரில், நீண்ட காலமாக குடியிருந்து வரும் மக்களை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூரில், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுமாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் பி.எம். காதர் உசேன் தலைமையில் நடைபெற்றது. எதிர்காலத் திட்டங்கள், பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர் என். குருசாமி பேசினார் இக்கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் ஜெயினுலாபுதீன், மாவட்ட பொருளாளர் ஹெச்.அப்துல் நசீர், மாவட்ட துணைத் தலைவர் பி.செந்தில்குமார், ஏ.ஜாகிர் உசேன், எம் கோஸ் கனி மாவட்ட துணைச் செயலாளர் ஏ ஆர் ஷேக் அலாவுதீன் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், "சீர்மிகு நகரம் என்ற பெயரில், நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி, நீர்நிலை புறம்போக்கில் இருப்பதாகச் சொல்லி, பல தலைமுறைகளாக, மாநகரில் மக்கள் குடியிருக்கும் வீடுகள் இடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். அவர்களுக்கு உடனடியாக மாற்று இடம் வழங்கி, வீடு கட்டித் தர வேண்டும். சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் கீழவாசல் பகுதி வழிபாட்டுத்தலங்கள், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி, சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதை உடனடியாக சீர் செய்ய வேண்டும். மதச்சார்பின்மையை காக்கவும், மக்கள் ஒற்றுமையை காக்கவும் இயக்கங்கள் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.