சகோதரர் சாவில் மர்மம் இருப்பதாக சகோதரி புகார்

கன்னியாகுமரி மாவட்டம்,புத்தன்வீட்டு விளை பகுதியை சேர்ந்த பெண் சகோதரரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-02-11 11:57 GMT

சகோதரர் சாவில் மர்மம் இருப்பதாக சகோதரி புகார்

குமரி மாவட்டம், நித்திரவிளை அருகே புத்தன்வீட்டு விளை பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் (49). இவர் கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி ஆசாரிபள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் சார்லஸ் சகோதரி நாகர்கோவில் புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்த ரஜினி (53)என்பவர் நித்திரவிளை போலீசில் நேற்று ஒரு புகார் அளித்தார்.

அந்த புகாரில் தனது சகோதரர் சார்லஸ் டிசம்பர் 27ஆம் தேதி காலை உடல் நிலை மிகவும் சரியில்லாமல் நித்திரவிளையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் பிழைக்க மாட்டார் என்று டாக்டர்கள் கூறியதால் ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரி சிகிச்சைக்கு கொண்டு செல்வதாகவும் எனக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர்.

Advertisement

உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் சிகிச்சை பலனின்றி ஜனவரி 6-ஆம் தேதி ஆசாரிபள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சுயநினைவின்றி உயிரிழந்தார். 7-ம் தேதி ஊரில் நல்லடக்கம் செய்வதாக தெரிவித்தனர். சகோதரர் சார்லஸ் இறப்பில் சந்தேகம் உள்ளதால் ஆஸ்பத்திரியில் அனுமதித்தவர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பாக விசாரித்த போலீசார் காஞ்சாம்புரம் பகுதி சேர்ந்த பால்ராஜ், ராஜு, சந்தோஷ் ஆகிய மூன்று மீது சந்தே வழக்கு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News