சிவகங்கை தொகுதி: கார்த்தி சிதம்பரத்திற்கு எதிர்ப்பு
நாடாளுமன்ற தேர்தலில் கார்த்தி சிதம்பரத்திற்கு சிவகங்கை தொகுதியை ஒதுக்கீடு செய்ய கூடாது என தீர்மானம் நிறைவேற்றபோட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-04 10:44 GMT
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஆர். இராமசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கார்த்தி சிதம்பரத்திற்கு, வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியை ஒதுக்கீடு செய்யக்கூடாது என்றும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.