சிவகாசி பட்டாசு ஆலை கேசியரை ஏமாற்றி ரூ 2 லட்சத்து 76 ஆயிரம் அபேஸ்...

சிவகாசி பரிதாபம்,தண்ணீர் பழம் சாப்பிட்டு வருவதற்குள் பைக்கில் இருந்த ரூ.2.76 லட்சம் பட்டாசு ஆலை கேசியர் பரிதவிப்பு.

Update: 2024-03-18 10:15 GMT

காவல்துறை விசாரணை


விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தண்ணீர்பழம் சாப்பிட்டு வருவதற்குள் பைக்கில் இருந்த ரூ.2.76 லட்சத்தை பறிகொடுத்த பட்டாசு ஆலையின் கேசியர் புகார். சிவகாசி மாநகர் திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனியை சேர்ந்தவர் மகேந்திரன் (58) சிவகாசியில் பட்டாசு ஆலையில் கேசியராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் வாட்டர் டேங்க் அருகேயுள்ள வங்கியில் காசோலையை மாற்றி ரூ 2லட்சத்து 76 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மற்றொரு வங்கிக்கு பணம் செலுத்த தனது டூவீலரில் சென்றுகொண்டிருந்த போது சிவகாசி டூ திருத்தங்கல் சாலையில் தனியார் பிரபல ஹோட்டலில் அருகில் சென்று கொண்டிருந்தபோது 2 பேர் மறித்து ஒரு பையை காண்பித்து இது உங்களது பணமா கீழே விழுந்து கிடக்கிறது என்று கூறியுள்ளனர். தொடர்ந்து டூவீலரை நிறுத்தி தண்ணீர்பழம் சாப்பிட்ட போதும் 2 பேர் அருகில் வந்து அருகில் ஆஸ்பத்திரியை காண்பித்து இது எந்த ஆஸ்பத்திரி என விசாரித்த போது டூவீலரில் வைத்திருந்த பணப்பையை காணாதது கண்டு மகேந்திரன் அதிர்ச்சி அடைந்தார். பணப்பையில் வைத்திருந்த ரூ.2லட்சத்து 76 ஆயிரம் மற்றும் காசோலையும் காணவில்லை என சிவகாசி நகர் காவல் நிலையத்தில் மகேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து பணப்பையை திருடிச் சென்ற 2 பேரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News