சிவகாசி : சரக்கு வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்

சிவகாசியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி இயக்கப்படும் சரக்கு வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசலும், விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது.

Update: 2024-06-15 05:56 GMT

விதிமீறும் லாரிகளால் கடும் போக்குவரத்து நெரிசல்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி நகர் பகுதியில் பகல் நேரங்களில் குறிப்பிட்ட நேரம் தவிற மற்ற நேரங்களில் லாரிகளில் லோடு இறக்கவும் ஏற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இருந்த போதிலும் நகர் பகுதியில் இஷ்டத்திற்கு லாரிகளில் லோடு இறக்கி ஏற்றப்படுகின்றன. குறிப்பாக அண்ணா காய்கறி மார்க்கெட் சாலை வழியாக லோடு ஏற்றி செல்லும் லாரிகள், கண்டெய்னர் லாரிகள் பீக் அவர் நேரங்களில் செல்வதால் அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது

.அதிக பாரத்துடன் அங்கும் இங்கும் அலையும் லாரிகளை பார்த்தாலே மக்கள் பயந்து தங்கள் வண்டியை ஓரம் கட்டுகின்றனர்.லாரி ஓட்டுனர்கள் பின்னால் மற்ற வண்டிகள் வருவதை கூட கவனிப்பதில்லை. சட்டென திருப்புவதால் விபத்து அபாயம் உள்ளது.இதனால் பள்ளி மாணவர்கள் அலுவலகம் செல்பவர்கள் குறிப்பிட நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்று விதிமீறும் லாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகர் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News