சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் சிவராத்திரி சிறப்பு பூஜைமில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-03-10 07:46 GMT

சிவராத்திரி 

கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவில், நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், சாமியார் மடம் செம்பொற்சோதிநாதர், ஏமப்பேர் விஸ்வநாதீஸ்வரர், தண்டலை ஆதிநாதீஸ்வரர், அரியபெருமானுார் ஆத்மஞான லிங்கேஸ்வரர், தென்கீரனுார் அருணாசலேஸ்வரர். சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர், கனங்கூர் ராமநாதீஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர், சடையம்பட்டு கேதாரீஸ்வரர், வடக்கநந்தல் உமாமகேஸ்வரர். ஆலத்துார் திருவாலீஸ்வரர் சிவன் கோவில்களில் மகாசிவராத்திரி உற்சவத்தையொட்டி நேற்று முன்தினம் மாலை துவங்கி நேற்று அதிகாலை வரை சிறப்பு பூஜை நடந்தது.
Tags:    

Similar News