ஊத்துமலையில் 6 போ் குண்டா் சட்டத்தில் கைது
தென்காசி மாவட்டம்,ஊத்துமலையில் 6 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
Update: 2024-06-27 11:24 GMT
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தை கொலை வழக்கில் தொடா்புடைய மாறாந்தை பிச்சையா மகன் ஜெயராமன்(27), முத்தையா மகன் ஆறுமுகம் (47), ஊத்துமலை அருகேயுள்ள கீழக்கலங்கல் இரட்டைக்கொலை வழக்கில் கைதான மலையாங்குளம் இந்திரா காலனி சண்முகையா மகன் வெங்கடேஷ்(22), வீரவநல்லூா் நைனாா் காலனி வேல்முருகன் மகன் வேனு(21), வெள்ளைப்பாண்டி மகன் நகுல்(21) , கன்னியாகுமரி மாங்காட்டுவிளை செல்வராஜ் மகன் அனீஸ் ராஜ்(30) ஆகியோரை குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்ய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் உத்தரவிட்டாா். அதன் பேரில் அதற்கான ஆணை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அளிக்கப்பட்டது.