விம்ஸ் ஆஸ்பத்திரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி

விம்ஸ் ஆஸ்பத்திரியில் தொழிற் முனைவோர் அமைப்பின் முலம் பேராசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி.

Update: 2024-01-18 11:16 GMT

விம்ஸ் ஆஸ்பத்திரியில் மேம்பாட்டு திறன் பயிற்சி

விநாயகா மிஷனின் விம்ஸ் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் தொழிற்முனைவோர் அமைப்பின் மூலம் பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி புதுமை மற்றும் தொழிற்முனைவோர் தலைப்பின் கீழ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கணேசன் அறிவுரையின் பேரில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஸ்டார்ட் அப் ஈரோடு கிளையின் திட்ட தலைவர் சக்திவேல் கலந்து கொண்டு துறை பேராசிரியர்களுக்கு புதுமை படைத்தல், தொழிற்முனைவோராவதற்கான வழிவகைகள், அரசு உதவிகள் சார்ந்த பயிற்சியை வழங்கினார். இதையடுத்து பேராசிரியர்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை துறையின் தொழிற்முனைவோர் அமைப்பின் தலைவர் பேராசிரியை தமிழ்சுடர், உறுப்பினர்கள் முத்தமிழ்செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News