ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்

குமாரமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடகோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2023-12-29 13:16 GMT

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்

நாடுமுழுவதும் தற்சமயம், அனைத்து மாநிலங்களிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை மத்தியஅரசு அமுல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தை தமிழகத்தில் கைவிட வேண்டும்.

இதனால், விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும், விசைத்தறிகளுக்கு வழங்கப்படும் மானிய மின்சாரமும் தடைபடும். சிறு, குறு தொழில் செய்பவர்கள், குடியிருப்பு வீடுகள், தோட்டங்கள் என பல்வேறு வகையில் பயன்படுத்தும் மின்சாரம் பெட்ரோல், டீசல், கேஸ் போன்ற விலையேற்றங்களை போன்றே மின்சார கட்டணமும் உயரும் அபாயம் உள்ளது.

இதனால், மக்கள் பெரிதும் பாதிக்கப்படும். இதை தமிழகத்தில் அமுல்படுத்த கூடாது என வலியுறுத்தி நேற்று, எலச்சிபாளையம் ஒன்றியம், குமரமங்கலம் மின்சார வாரிய அலுவலம் முன்பாக, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்மணி, சுரேஷ், மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ், மாவட்ட குழுஉறுப்பினர்கள் பழனியம்மாள், தங்கராஜ், ஒன்றிய குழுஉறுப்பினர் ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியாக, ஒன்றியகுழு உறுப்பினர் சக்திவேல் நன்றியுரையாற்றினார்.

Tags:    

Similar News