ரேஷன் அரிசி கடத்தல் - 2.8 டன் அரிசி பறிமுதல்

காஞ்சிபுரத்தில் கடத்த முயன்ற 2870 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-06-15 03:23 GMT

பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள் 

காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பொது விநியோகத் திட்ட அரிசி கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பாலாஜி தலைமையில், காஞ்சிபுரம் குடிமைப் பொருள் தனி வட்டாட்சியர் மற்றும் தனிவருவாய் ஆய்வாளர்கள் மற்றும் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை, தலைமைக்காவலர் ஆகியோர்களுடன் காஞ்சிபுரத்தின் பல்வேறு பகுதிகளில் தணிக்கை மேற்கொண்டனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் வட்டம், தாயார்குளம் அண்ணா பூங்கா அருகில் பொது விநியோகத் திட்ட அரிசி கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில், காஞ்சிபுரம் குடிமைப்பொருள் தனிவட்டாட்சியர் மற்றும் தனிவருவாய் ஆய்வாளர்கள் மற்றும் குடிமைப்பொருள் காவல் உதவி ஆய்வாளர் ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது TN 10 AT 8835 Dost Van என்ற வாகனத்தில், 60 சிப்பங்களில் 2870 கிலோ பொது விநியோகத் திட்ட அரிசி உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி இருந்ததால் மகஜர் சாட்சிகளின் முன்னிலையில் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட 2870 கிலோ பொது விநியோகத்திட்ட அரிசியினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், சிறுகாவேரிப்பாக்கம், காஞ்சிபுரம் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டு இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News