காவிரி ஆற்றிலிருந்து லாரியில் மணல் கடத்தல் - ஒருவர் கைது

Update: 2023-11-23 06:25 GMT

பறிமுதல் செய்யப்பட்ட லாரி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவிரி ஆற்று பகுதியில் லாரியில் மணல் கடத்துவதாக காவல் உதவி ஆய்வாளர் உதயகுமார்க்கு தகவல் கிடைத்தது. இந்த தகவல் அடிப்படையில் நவம்பர் 21 ஆம் தேதி காலை 7 மணி அளவில், கரூர்- வாங்கல் சாலையில் வெற்றி விநாயகா பள்ளி அருகே, வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக ஈரோடு மாவட்டம், ஆலந்தூர் அருகே தட்டார பாளையம் பகுதியைச் சேர்ந்த அசோக் குமார்  (27), கொடுமணி நாயக்கனூர் பகுதியை சேர்ந்த ஜெயபால் ஆகிய இருவரும் டிப்பர் லாரியில் மணல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது காவலரை கண்டதும் ஜெயபால் லாரியில் இருந்து இறங்கி தப்பி ஓடி தலை மறைவாகி விட்டார். பிடிப்பட்ட அசோக் குமாரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும், லாரியில் கடத்தி வந்த மூன்று யூனிட் மணலும், டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்து,தப்பி ஓடிய ஜெயபாலை வாங்கல் காவல்துறையினர் தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News