பராமரிப்பின்றி உள்ள மகளிர் சுகாதார வளாகம்

திருத்தணியில் புதிய சுகாதார வளாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

Update: 2024-03-04 17:01 GMT

பராமரிப்பின்றி உள்ள மகளிர் சுகாதார வளாகம்.

திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் ஊராட்சிக்குட்பட்ட பெருமாள்தாங்கல் புதுார் கிராமத்தில் கடந்த, 2001- 02ம் ஆண்டில் திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ., நிதியில் இருந்து, 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில், மகளிர் சுகாதார வளாகம் புதிய ஏற்படுத்தி தரப்பட்டது. ஆனால் ஊராட்சி நிர்வாகம் முறையாக மகளிர் சுகாதார வளாகத்தை பராமரிக்காமல் மெத்தனம் காட்டி வந்ததால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் சுகாதார வளாகம் பயன்படுத்தாமல் மூடப்பட்டது. எனவே பராமரிப்பின்றி பழுதடைந்துள்ள மகளிர் சுகாதார வளாகத்தை அகற்றி அதே இடத்தில் புதிய சுகாதார வளாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Tags:    

Similar News