சமூக ஊடக பயிற்சி

பெரம்பலூரில் திமுகவினருக்கான சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.;

Update: 2024-01-14 12:49 GMT

சமூக ஊடக பயிற்சி 

பெரம்பலூர் மாவட்ட அளவிலான சமூக_ஊடகங்களுக்கான பயிற்சிவகுப்பு காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் பெரம்பலூர் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னெடுப்பில், தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில் மாவட்ட அளவிலான சமூக ஊடகங்களுக்கான பயிற்சிவகுப்பு காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.

Advertisement

இதில் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின், முக்கிய பணி என்ன என்பதும் திமுகவின் செயல்திட்டங்கள், பயன்கள் சரியாகவும் முறையாகவும் மக்களுக்கு சென்றடைய செய்ய வேண்டிய பணிகள் குறித்தும். அதற்கான வழிமுறைகள் எடுத்துரைத்து, மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின், சாதனைகள் மற்றும் தகவல், நடைமுறைகளை மக்களுக்கு சென்று சேர்ப்பது குறித்து கலந்துரையாடல் செய்தனர். இந்நிகழ்ச்சியின் போது ஆலத்தூர், வேப்பந்தட்டை வேப்பூர் பெரம்பலூர் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த ' திமுக தகவல் தொழில்நுட்ப அணிநிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் திமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News