குமாரபாளையத்தில் காஸ் பைப் லைன் அமைக்க மண் பரிசோதனை பணி துவக்கம்

குமாரபாளையம் காவிரி ஆற்றின் வழியாக காஸ் பைப் லைன் அமைக்க மண் பரிசோதனை பணி துவக்கப்பட்டது.

Update: 2024-01-30 14:46 GMT

மண் சோதனை செய்த அதிகாரிகள்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி ஆற்றின் வழியாக காஸ் பைப் லைன் அமைக்க மண் பரிசோதனை பணி துவக்கப்பட்டது. காஸ் பைப் லைன் அமைக்கும் பணி, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை ஒருங்கிணைத்து நடந்து வருகிறது.

இதன்  ஒரு கட்டமாக குமாரபாளையம் காவிரி ஆற்றின் வழியாக காஸ் பைப் லைன் கொண்டு செல்வதற்காக, மண் பரிசோதனை பணி துவக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை உதவி இயக்குனர் வெங்கடாசலம்  கூறியதாவது: காஸ் லைன் பைப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், இதன் ஒரு பகுதியாக குமாரபாளையம் வழியாக அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பைப் லைன் காவிரி ஆற்றை கடந்து அமைக்கப்படவிருப்பதால், அதற்கான மண் பரிசோதனை பணி காவிரி ஆற்றில் துவங்கப்பட்டுள்ளது.   இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News