சேலம் மின்வாரிய கோட்டங்களில் சூரிய சக்தி மின்திட்ட பதிவு முகாம்
சேலம் மின்வாரிய கோட்டங்களில் சூரிய சக்தி மின்திட்ட பதிவு முகாம் இன்று தொடங்குகிறது;
பைல் படம்
சேலம் மின்வாரிய கோட்டங்களில் சூரிய சக்தி மின்திட்ட பதிவு முகாம் இன்று தொடங்குகிறது. சேலம் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர்கள் குணவர்த்தினி (கிழக்கு), அன்பரசன் (தெற்கு), ராஜவேலு (மேற்கு) ஆகியோர் தனித்தனியாக வெளியிட்டுள்ள விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதிய மற்றும் புதுப்பிக்கதக்க எரி சக்தி அமைச்சகத்தின் கீழ் வீடுகளில் உள்ள மின் இணைப்பில் மானியத்துடன் கூடிய சூரிய மின்சக்தி மின்திட்டத்தில் பதிவு செய்யும் முகாம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. அதன்படி மரவனேரி உபகோட்டம் சார்பில் கோரிமேடு பிரிவு அலுவலகத்தில் இந்த முகாம் நடக்கிறது.
அதே போன்று உடையாப்பட்டி, காரிப்பட்டி அலுவலகங்களிலும் முகாம் நடக்கிறது. முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. பயனாளிகள் pmsuryaghar.gov.in மற்றும் QRT pmsuryaghar என்ற இணைய தளம் மூலம் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் மின் நுகர்வோர்கள் இந்த திட்டத்தில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் ெதற்கு கோட்டத்திற்குட்பட்ட பிரிவு அலுவலகங்களில் இன்று தொடங்கி, 8-ந்தேதி வரை நடக்கிறது.
இதேபோன்று சேலம் மேற்கு கோட்டத்திற்குட்பட்ட மின்வாரிய அலுவலகங்களில் சூரிய சக்தி மின் திட்ட இணைப்பு முகாம் நாளை (செவ்வாய்கிழமை) தொடங்கி 8-ந்தேதி வரை நடக்கிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.