ராணுவ வீரர் வீடுகளை உடைத்து கொள்ளை

தோவாளையில் ராணுவ வீரர் , தொழிலாளி வீடுகளை உடைத்து கொள்ளை

Update: 2024-04-16 11:00 GMT

கொள்ளை

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை புதூர் காலனியில் வசிப்பவர் குமார் (54) ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி உமா (47) பிள்ளைகள் வெளியூரில் வசித்து வருகின்றனர். நேற்று உமாவுக்கு உடல்நலம் சரியில்லாததால்  வீட்டை பூட்டிவிட்டு அருகே உள்ள பூர்வீக வீட்டுக்கு கணவன் மனைவி இருவரும் சென்று தங்கி இருந்தனர். இன்று காலை வீட்டுக்கு அவர்கள் வந்த போது, வீட்டின்   கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன.  வீட்டில் பெரிய அளவில் பணம் மற்றும்  நகைகள் கிடைக்காத ஆத்திரத்தில் பொருட்களை வீசி எறிந்து இருக்கலாம் என தெரிகிறது.    சம்பவம் குறித்து போலீசில் குமார் புகார் தெரிவித்தார். போலீஸ் விசாரணையில்  வீட்டில் இருந்த ஒரு பவுன் கம்மல், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருப்பதாக தெரியவந்தது. இந்த நிலையில் குமாரின் வீட்டருகே வசிக்கும் பூக்கடை ஊழியர் செல்வகுமார் என்பவரின் வீட்டுக்குள்ளும் மர்ம நபர்கள் புகுந்து அங்கும் பணம் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர். குடியிருப்பு பகுதியில் ராணுவ வீரர், பூக்கடை ஊழியர் வீடுகளில் கொள்ளையர்கள் புகுந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஆரல்வாய்மொழி போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News