திடக்கழிவு மேலாண்மை - ரூ.43.80 லட்சத்தில் 6 புதிய வாகனங்கள்

Update: 2023-11-01 03:44 GMT

பயன்பாட்டிற்குத் துவக்கம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்காசி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிக்காக ரூ. 43 லட்சத்து 80 ஆயிரத்தில், புதிதாக வாங்கப்பட்ட 6 இலகு ரக வாகனங்களை நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா், பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்வின்போது அவா் பேசியதாவது: வீடுகள், வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை, மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும். தற்போது மழைக் காலம் என்பதால், கொசு உற்பத்தி அதிகமாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு, கொசுப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் பணிகளில் நகராட்சிப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். கொசு ஒழிப்புப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களைத் தூய்மைப் பராமரிப்பதோடு, சேமித்து வைக்கப்படும் தண்ணீரில், கொசு புகாதவாறு மூடி வைத்து பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்றாா். இந்நிகழ்வில், நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், துணைத் தலைவா் சுப்பையா, நகா்மன்ற உறுப்பினா்கள் அபுபக்கா், முத்துக்கிருஷ்ணன், சுகாதார அலுவலா் முகமது இஸ்மாயில், சுகாதார ஆய்வாளா்கள் மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News