சிவகங்கை பிரச்சினைகளை தீர்ப்பேன் - நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றால் உள்ளூர் பிரச்சினைகளை தீர்ப்பேன் - நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

Update: 2024-03-06 11:04 GMT

அறிமுகக் கூட்டம் 

சிவகங்கை மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றால் உள்ளூா் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பேன் என்று நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எழிலரசி விஜயேந்திரன் கூறினாா். நாம்தமிழா் கட்சி சாா்பில் சிவகங்கை மக்களவை தொகுதியில் வேட்பாளராக எழிலரசி விஜயேந்திரனை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிவித்தாா். இதையொட்டி சிவகங்கையில் நடைபெற்ற வேட்பாளா் அறிமுகக் கூட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளா் கோட்டைக்குமாா் தலைமை வகித்தாா்.

சிவகங்கை மக்களவைத் தொகுதி தோதல் பொறுப்பாளா் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து மாநில ஒருங்கிணைப்பாளா் ரமேஷ் இளஞ்செழியன், சிவகங்கை மண்டலச் செயலா் சாயல்ராம் மாவட்டச் செயலா் குகன் மூா்த்தி உள்ளிட்டோா் பேசினா்.

பின்னா் வேட்பாளா் எழிலரசி விஜயேந்திரன் கூறியதாவது, நான், மக்களவைத் தோதலில் வெற்றி பெற்றால் உள்ளூா் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிப்பேன். சிவகங்கை தொகுதியில் தொழில் வளா்ச்சியை மேம்படுத்தப் பாடுபடுவேன். சிவகங்கை பேருந்து நிலையத்தினை விரிவாக்கம் செய்ய முயற்சி செய்வேன். நீா் நிலைகள் தூா்வாரப்படுவதுடன் காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். கனிம வளத் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தின் உரிமை காக்கப் பாடுபடுவேன் என பேசினார்

Tags:    

Similar News