உறங்கான்பட்டியில் தந்தையை வெட்டிக் கொலை செய்த மகன் கைது

உறங்கான்பட்டியில் நண்பர்களுடன் சேர்ந்து தந்தையை வெட்டிக் கொலை செய்த மகனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-05-11 03:16 GMT

உறங்கான்பட்டியில் நண்பர்களுடன் சேர்ந்து தந்தையை வெட்டிக் கொலை செய்த மகனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உறங்கான்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவர் சத்யா என்பவரை திருமணம் செய்து அதே பகுதியில் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், இவர்களுக்கு 17 வயதில் மகன் உள்ளான். இதனிடையே கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, செல்லப்பாண்டி பிரிந்து வேரோடு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மனைவியை வீட்டிற்கு வந்து அவ்வப்போது தொந்தரவு செய்து வந்துள்ளார். நேற்று இரவு சிறுவனின் நண்பர்கள் வீட்டிற்கு வந்திருந்த போது, அவர்களையும் செல்லபாண்டி துன்புறுத்தியதாக கூறப்படுகின்றது.

Advertisement

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சிறுவன் தன்னுடைய நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து அதிகாலை வீட்டின் அருகே தந்தையை தனியாக அழைத்துச் சென்று கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்துள்ளார். தகவலறிந்து வந்த ஒத்தக்கடை காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து ஒத்தக்கடை காவல்துறையினர் சிறுவன் உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ள நிலையில் விசாரணை கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News