தாயை தாக்கி 10 பவுன் செயின் பறித்த மகன்

Update: 2023-10-30 12:27 GMT
பைல் படம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி அடுத்த மாடத்தட்டுவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் தேவசகாயம். இவரது மனைவி சேவியர் பெனடிக் (66).  இவர்களது மகன் ஆரோக்கிய அருள் ராஜேஷ் (47). ஆரோக்கிய அருள்ராஜேஷிற்கு  திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது.  இந்த நிலையில் நேற்று இரவு ஆரோக்கிய அருள்ராஜேஷ் தாயார் சேவியர் பெனடிக்டிடம்  ரூ. 5000 பணம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு அவர் பணம் இல்லை என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆரோக்கிய அருள்ராஜேஷ் தாயார் சேவியர் பெனடிக்ட்டை அவதூறாக பேசி அருகில் கிடந்த மூங்கில் சேரால்  சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தலை, நெஞ்சு பகுதிகளில் பலத்த காயமடைந்த சேவியர் பெனடிக்ட் சத்தம் போட்டவாரே வெளியே வந்துள்ளார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் தாலி செயினை பறித்து  சென்று விட்டார்.

படுகாயம் அடைந்த சேவியர் பெனடிக்ட் அவரது கணவர் உதவியுடன் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.  சம்பவம் குறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் ஆரோக்கிய அருள்ராஜேஷ் மீது வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். பெற்ற மகனே தாயை அடித்து கழுத்தில் கிடந்த தாலி செயினை பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News