மகளை தாக்கிய மருமகன் - தட்டிக்கேட்ட மாமனார் கொலை
Update: 2023-12-12 06:19 GMT
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தம்மம்பட்டி அருகே உலிபுரத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சரவணன், 40. இவரது மனைவி தனலட்சுமி, 36. இவர்கள் இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. இதனால், நாகியம்பட்டியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு, தனலட்சுமி சென்று சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் நாகியம்பட்டி சென்ற சரவணன் மாமனார் மருதையிடம் சாப்பாடு போடும்படி கூறியுள்ளார். தனது மகளை எதற்கு அடித்தாய் என்று தடியை காட்டி மிரட்டி, துரத்தி விட்டுள்ளார்.இந்நிலையில் நேற்று. குட்டை ஆண்டி ஐயனார் கோவில் பகுதியில், மருதை ரத்தகாயங்களுடன் இறந்து கிடந்தார். தனது தந்தையை, கணவர் சரவணன் அடித்துக் கொலை செய்துள்ளதாக, தம்மம்பட்டி போலீசில் தனலட்சுமி புகார் அளித்தார்.மாமனாரை அடித்து கொலை செய்த மருமகன் சரவணன் மீது, கொலை வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.