சொத்துத் தகராறில் தாயை கொன்ற மகன்

கண்டாச்சிபுரம் அருகே சொத்து தகராறில் தாயை கத்தியால் வெட்டி மகன் கொலை செய்ததால், பரபரப்பு உண்டானது.

Update: 2024-03-12 09:18 GMT
அருள் ஐயப்பன்

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே சொத்து தகராறு, தாயை கத்தியால் வெட்டி கொலை செய்த மூத்த மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கண்டாச்சிபுரம் அடுத்த பழைய கருவாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (65), அவரது மனைவி ஆகாசவாணி(60), இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகன் அருள் அய்யப்பன்(32), இளைய மகன் அரி(30), கிருஷ்ணமூர்த்தி- ஆகாசவாணி தம்பதியினருக்கு மொத்தமாக 120 செண்ட் நிலம் உள்ளது. அதில் 70 செண்ட் நிலத்தை இளையமகன் அரியிடம் 5 வருடங்களுக்கு முன்பு அடமானம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இளையமகன் அரி மொத்தமாக 120 செண்ட் நிலத்தை தாய் தந்தையுடன் விவசாயம் செய்து வருகிறார். அதில் வரும் விவசாயம் செய்த வருமானங்களை அரி மற்றும் தாய் தந்தையும் முழுவதுமாக எடுத்து கொள்வதாக கூறியும், அதனை பலமுறை கேட்டும் தரவில்லை என ஆத்திரமடைந்துள்ளார் . இதில் நேற்று குடும்பத்தினருடன் வாக்குவாதம் அதிகரித்த நிலையில் அருள் அய்யப்பன் நேற்று அவரது தாயை கத்தியால் தலையிலும், இடது கையிலும் பயங்கரமாக வெட்டியுள்ளார்.

இதனைபார்த்த குடும்பத்தினர் தாய் ஆகாசவாணியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த தாய் ஆகாசவாணி நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஆகாசவாணியின் கணவர் கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் மூத்த மகன் அருள் அய்யப்பனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி கைது செய்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News