காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து சவுந்தரராஜன் பிரசாரம்
மயிலாடுதுறை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சவுந்தரராஜன் பிரசாரம் மேற்கொண்டார்.;
Update: 2024-04-17 07:59 GMT
சவுந்தரராஜன் பிரசாரம்
இந்தியா கூட்டணியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் ஆர்.சுதாவை ஆதரித்து, கும்பகோணம் காந்தி பூங்கா அருகில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அ.சவுந்தரராஜன், கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். நிகழ்வில், தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளர் – மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம் , நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் , கும்பகோணம் மாநகர திமுக செயலாளர் – மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன் , கும்பகோணம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் ,ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் தி.கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ.சுதாகர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.