தென்னிந்திய செங்குந்தர் மகாஜன ஆலோசனைக் கூட்டம்

ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற செங்குந்தர் மகாஜன ஆலோசனைக் கூட்டத்தில் பாஜகவின் கைப்பாவையாக செயல்படும் தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் முன்னாள் தலைவர் கே,பி,கே, செல்வராஜை சங்கத்திலிருந்து நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

Update: 2024-04-01 06:28 GMT

ஆலோசனைக் கூட்டம் 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் மண்டலக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அரியலூர் மாவட்ட செங்குந்தர் மகாஜன சங்க மாவட்ட செயலாளர் புனிதம், மேலான் தலைவர் பெண்ணாடம் ராஜவேலு தலைமை செயற்குழு உறுப்பினர் பி டி ராஜன், கரூர் மாவட்ட மேலாண் தலைவர் ஈட்டி பரமேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

முன்னதாக சங்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செங்குத்துர் மகாஜன சங்க தலைவர் வக்கீல் ராமலிங்கம் , கடலூர் மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி ஆகியோர் கருத்துரை வழங்கினர். கூட்டத்தில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர் உள்ளிட்ட திருச்சி மண்டலத்திற்குட்பட்ட மாணிக்கம், சுப்பிரமணியன், பி எல் ஆர் முருகன், பச்சமுத்து, ஜெகதீசன், சிவா, கணபதி, நாகராஜன், பரமசிவம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் முன்னாள் தலைவர் கே,பி,கே, செல்வராஜை சங்கத்திலிருந்து நீக்கம் செய்வது என்ற ஒற்றை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.முன்னதாக திருச்சி மெட்டல் மணிக்கு நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மண்டல, மாவட்ட அளவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை பரிசுகள் வழங்குதல் குறித்து ஆலோசனை,தலைமை சங்கர் நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மாநில தலைவரின் தன்னிச்சையான செயல்பாடுகள் குறித்து ஆலோசனை அரியலூர் மாவட்ட சங்கத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசனை தலைவரால் கொண்டுவரப்படும் இதர பொருட்கள் குறித்து ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றது.முடிவில் தலைமை சங்க செயற்குழு உறுப்பினர் செல்வம் நன்றி கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் புனிதம்,மற்றும் தென்னிந்தியமகாஜன சங்க கரூர் மாவட்ட தலைவர் பி டி பரமேஸ்வரன் ஆகியோர் சந்தித்தனர் அப்பொழுது இச்சங்கத்தின் முன்னாள் தலைவர் கே,பி,கே செல்வராஜ் சங்க விதிமுறைகளை புறக்கணித்து சங்கத்திற்கும் நீதிமன்றத்திற்கும் மதிப்பு கொடுக்காமல் சங்கத்தில் பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல்களை செய்துள்ளார்.

மூன்று வருடத்திற்கு ஒரு முறை சங்க தேர்தல் நடத்த வேண்டும் என்ற நிலையில் சங்கத்தில் உள்ள நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்காமல் தேர்தலை நடத்தியுள்ளார் இது செங்குந்தர் இன மக்களிடையே உள்ள ஒற்றுமையை சீர்குலைக்கும் செயலாக உள்ளது சங்க தலைவர் எந்த கட்சியையும் சாராமல் இருக்க வேண்டும் என்ற விதிமுறையை பின்பற்றாமல் அரசியல் கட்சியை நோக்கி சென்று கொண்டுள்ளார் .

அவர் பாஜகவில் சேர்ந்து அக்கட்சியின் கைப்பாவையாக செயல்படுகிறார். மேலும் சங்க இதழான செங்குந்தர் மித்ரன் என்ற புத்தகத்தில் பாஜகவின் தலைவர்களின் படங்களை அச்சிட்டு எவ்வித கோரிக்கையும் வைக்காமல் ஒரு சங்கத் தலைவர் என்பதை மறந்து ராமர் கோவில் உள்ளிட்ட ஒரு சாரார் வழிபாட்டு தலங்களை அச்சிட்டு சங்கத்தின் விதிமுறைகளை மீறி உள்ளார் எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரின் செயலாளர் சங்கப் பதிவாளர்  ஆகியோருக்கு கடிதம் அனுப்ப உள்ளோம் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News