ஏரியின் கரைகளில் 10,000 பனை விதைகள் விதைப்பு
திருச்சி மாவட்டம், முசிறி அருகே திருத்தியமலை ஏரியில் பனை விதை நடும் விழா நடைபெற்றது.
திருத்தியமலை ஏரியில் கைஃபா மற்றும் கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் இணைந்து மக்கள் பங்களிப்புடன் புனரமைப்பு பணியினை செய்து வருகிறது. இப்பணியின் முதல் கட்டமாக 7.5 கிலோமீட்டர் ஏரியின் வரத்து வாய்க்காலான புங்கன் வாரி ஏரி தூய்மை செய்யப்பட்டது. வாரியின் இரு கறைகளும் பலப்படுத்தப்பட்டு உயர்த்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக ஏயில் இருந்த சீமை கருவேல முள் மரங்கள் அகற்றும் பணியும், ஏரியை சுற்றி கரை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. நேற்று கரை அமைக்கப்பட்ட பகுதிகளில் பத்தாயிரம் பனை விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் புலிவலம் பகுதியில் இயங்கும் தனியார் கல்லூரியின் இளைஞர்களும் கைபா நிறுவனத்தின் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் அசோக்ராஜ் மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் பாண்டியன், மோகன்ராஜ், பால்ராஜ், சதீஷ், கலாமின் விதைகள் அறக்கட்டளை லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.