தர்மபுரி பாமக வேட்பாளர் திண்டிவனத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்
திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தர்மபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தனது வாக்கினை பதிவு செய்தார்.
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு தொடங்கி நடைபெற்று வருகிற நிலையில் விழுப்புரத்தில் வாக்காளர் அதிகாலையில் இருந்தே வாக்களித்து வருகின்றனர். விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியை பொறுத்த வரை விழுப்புரம், திண்டிவனம், விக்கிரவாண்டி, வானூர், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.
விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு பதிவிற்காக 1068 வாக்கு சாவடி மையங்களில் 1966 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதல் 51 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தபட்டுள்ளன.
விழுப்புரம் தனி தொகுதியில் 7 லட்சத்து 40 ஆயிரத்து 412 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 53 ஆயிரத்து 638 பெண் வாக்காளர்களும் மாற்றுபாலினத்தவர் 209 பேர் என மொத்தம் 14 லட்சத்து 94 ஆயிரத்து 259 பேர் வாக்களிக்க உள்ளனர் . இதற்காக 4152 வாக்கு பதிவு கருவிகளும், 2076 கன்ரோல் யூனிட் எனப்படும் கட்டுப்பாட்டு கருவிகளும், 2249 வி.வி.பேட் எனப்படும் உறுதிப்படுத்தும் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
தேர்தல் வாக்குபதிவு மையங்களில் பாதுக்காப்பிற்காக 2200 காவல்துறையினரும், 344 துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியிலும், 6804 பேர் தேர்தல் அலுவலர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
திண்டிவனத்தில் உள்ள மரகதாம்பிகை அரசு பள்ளியில் பாமக தலைவர் அண்புமணி ராமதாஸ் மனைவியும் தர்மபுரி பாராளுமன்ற பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி ராமதாஸ் ஜனநாயக கடமையான தனது வாக்கினை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து பேட்டியளித்த செளமியா அன்புமணி தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதாக தெரிவித்தார். தர்மபுரியில் மகளிர் தனக்கு அதிக வரவேற்பு அளிப்பதால் தனக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும் தான் ஏற்கனவே அரசியலில் இருப்பதால் அரசியல் தனக்கு புதியதில்லை என கூறினார்.