ஆயுதப்படை மைதானத்தில் எஸ்பி ஆய்வு
திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் திண்டுக்கல் சரக டிஐஜி ஆயுதப்படை காவலர்களின் வருடாந்திர ஆய்வின் போது காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்;
Update: 2023-12-28 14:27 GMT
எஸ்பி ஆய்வு
திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் திண்டுக்கல் சரக டிஐஜி ஆயுதப்படை காவலர்களின் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி, உடைமை, பொருட்கள், அலுவலகங்கள் மற்றும் காவல்துறையினரின் வாகனங்களையும் ஆய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்வில் மாவட்ட எஸ்பி பிரதீப், ஆயுதப்படை டிஎஸ்பி ஆனந்தராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போ எஸ்பி பிரதீப் கூறியதாவது, நம் உடம்பை எப்படி பராமறிப்பது போல வாகனங்களையும் பராமரிக்க வேண்டும். குற்றவாளிகளை தப்பிக்க விடக்கூடாது இதற்கு தான் வாகனங்களை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.