பேரளம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு

Update: 2023-12-08 05:17 GMT

எஸ்பி ஜெயக்குமார் ஆய்வு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  பேரளம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தும், காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலைகளையும் ஆய்வு செய்து காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். காலையிலும் மாலையிலும் பகல் நேர ரோந்து அனுப்பி கூட்டம் உள்ள இடங்களில் ரோந்து காவலர்கள் சென்று சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும்,அதிக அளவில் இரவு ரவுண்டு அனுப்ப வேண்டும் எனவும் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் திருட்டுப் போன்ற எந்த சட்டவிரோத செயல்கள் நடைபெறாமல் இருக்க விழிப்புடன் இருந்து செயல்பட வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார். ஆய்வின் போது நன்னிலம் உட் கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ்மாறன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News