வாக்கு எண்ணும் மையத்தில் எஸ்பி ஆய்வு
தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார்.;
Update: 2024-04-18 11:05 GMT
எஸ்பி ஆய்வு
மக்களவை தேர்தல் வரும் 19.04.2024 அன்று நடைபெற உள்ள நிலையில் அதற்கான வாக்கு எண்ணும் மையமான தூத்துக்குடி வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று (17.04.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார். ஆய்வின் போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.