குமாரபாளையம் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளை எஸ்பி ஆய்வு
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பையொட்டி குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளை மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பையொட்டி குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளை மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு. பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அரசியல் கட்சியின் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு வரும் சூழ்நிலையில் தற்பொழுது குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 279 வாக்குச்சாவடி மையங்களில் 21 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என சட்டமன்றத் தேர்தலில் கண்டறியப்பட்டு அவற்றிற்கு கூடுதல் பாதுகாப்புகள் வழங்கப்பட்டிருந்தது.
அதனை ஒட்டி தற்பொழுது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்து அதற்கூறிய பாதுகாப்பு பணிகளில் ஈடுபட திருச்செங்கோடு மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது குமாரபாளையம் அருகே உள்ள சின்னப்பநாயக்கன்பாளையம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு கல்வியியல் கல்லூரி உள்ளிட்ட வாக்குப்பதிவு மையங்களை ஆய்வு செய்தவுடன் அங்கு படிப்படியும் அரசு ஊழியர்களிடம் கலந்து ஆலோசித்தார்.
பின்னால ஒரு கூறுகையில் இந்த ஆய்வு பணிகள் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்யப்பட்டு பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்தார்.